கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது குடிநீர் கேட் வால்வு அமைக்கும் பணிக்காக ஜெசிபி இயந்திரம் மூலம் பள்ளம் வெட்டும் பணி தொடங்கியது. இதனை உடனடியாக முடித்து குடிநீரை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.