கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கும் பணிக்காக போடப்பட்ட ராட்சத குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நவீன இயந்திரம் மூலம் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல் கூட்டு குடிநீர் திட்டத்தை விரையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.