குறிஞ்சிப்பாடி: அங்காளம்மன் கோவிலில் அமாவாசை வழிபாடு

78பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்ன கடைவீதியில் எழுந்தருளியுள்ள அங்காளபரமேஸ்வரி கோவில், கடைவீதியில் உள்ள இராஜ காளியம்மன் கோவில், உடையார் தெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி