விழப்பள்ளம்: செங்கழணி மாரியம்மன் கோவிலில் கொலு

83பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு செங்கழணி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டுமல்லாமல் இன்று 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தினந்தோறும் பல்வேறு வகையான உற்சவம் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி