கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் பழந்தெருவில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலில் இன்று(செப்.30) பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள பல்வேறு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.