கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கும் பணிக்காக பள்ளம் வெட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் குடிநீர் கேட் வால்வு அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.