ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி கர்ப்பமான நிலையில் அதற்கு காரணமானவர் யார் என்று தெரியவில்லை. பெற்றோர் இந்த விஷயத்தை வெளியே தெரியாமல் மறைத்துள்ளனர். ஆனால், வயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக சிறுமி மயக்கமடைந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிரசவத்தின் போது சிறுமி உயிரிழந்து விட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான நபரை தேடி வருகின்றனர்.