2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் தேசியக்கொடிகள் பாகிஸ்தானின் கராச்சி மைதானத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்திய தேசியக்கொடி அதில் இடம்பெறவில்லை. சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய தேசியக்கொடி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியா UAE-யில் விளையாடுவதால் பாகிஸ்தானில் இந்திய கொடி இடம்பெறவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.