கோவை: பயிற்சி மைய கட்டணத்தை திருப்பி கேட்ட மாணவர் மீது தாக்குதல்
சத்தியமங்கலம் தாசப்ப கவுண்டர் புதூரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சந்துரு(23). பட்டதாரியான இவர் வங்கி தேர்வு தயாராகி வந்தார். இதற்காக கோவை சாயிபாபா காலனியில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தார். அப்போது மையத்தில் சரியாக பாடம் எடுக்கவில்லை என கூறி மாணவர் சந்துரு தான் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். இது தொடர்பாக அவருக்கும், மையத்தின் உரிமையாளருக்கும் இடையே தகராறு இருந்தது. இதேபோல், நேற்று அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில் ஆத்திரமடைந்த பயிற்சி மையத்தின் உரிமையாளர் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பிரவீன் குமார்(36) என்பவர் பாட்டிலால் சந்துருவை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில், போலீசார் பிரவீன் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.