அதிரப்பள்ளி: சாலையில் யானை - சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

54பார்த்தது
சாலக்குடி - வால்பாறை சாலையில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மழைப்பொழிவு குறைந்த நிலையில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை காண சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில், யானைகள் அடிக்கடி வாகனங்களை வழிமறிக்கின்றன. இதனால், இந்த இங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கடந்த மாதங்களில் கபாலி என்ற யானை வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில் முகாமிட்டு வாகனங்களை விரட்டியது.

இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக இந்த சாலையில் கணபதி என்று வனத்துறையால் பெயரிடப்பட்ட ஒற்றை யானை அடிக்கடி சாலையில் உலா வருவதால், சுற்றுலா பயணியர் அச்சமடைந்துள்ளனர். வால்பாறை, மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில், வனத்தை ஒட்டி சாலை உள்ளதால், யானைகள் அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன. எனவே, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும். மாலை, 6: 00 மணிக்கு பின், அதிரப்பள்ளி ரோட்டில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் நேற்று அறிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி