இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முகாம் கோவையில் தொடங்கியுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கான ஆள் சேர்ப்பு முகாம் இன்று திங்கட்கிழமை காலை 6 மணி அளவில் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் தொடங்கியது. இந்த ஆள் சேர்ப்பு முகாமில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து பலர் பங்கேற்கின்றனர். மொத்தம் 174 ராணுவ வீரர்கள் மற்றும் 50 கிளார்க் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படவுள்ளன. இன்று முதல் வரும் நவம்பர் 10-ம் தேதி வரை இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று குஜராத், கோவை, தெலங்கானா, புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டாமன் டையூ மற்றும் லட்சத்தீவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.