வால்பாறை - Valparai

வால்பாறை: பாதுகாப்பில்லாத பன்னிமேடு ரேஷன் கடை

வால்பாறை: பாதுகாப்பில்லாத பன்னிமேடு ரேஷன் கடை

வால்பாறை அருகே, பன்னிமேடு எஸ்டேட்டில், பாதுகாப்பில்லாத ரேஷன் கடை வாயிலாக பொருட்கள் வழங்குவதால், தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர். வால்பாறை தாலுகாவில் மொத்தம் உள்ள 15250 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 48 ரேஷன் கடை வாயிலாக பொதுவினியோக திட்டத்தில் பொருட்கள் வழங்கப்படுகின்றன.  இந்நிலையில், வால்பாறை நகரை தவிர, எஸ்டேட் பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகள் அனைத்தையும் யானைகள் அடிக்கடி சேதப்படுத்தி வருவதால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி வருவதோடு, பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. யானைகளின் தொந்தரவால் வால்பாறையை சுற்றியுள்ள பெரும்பாலான எஸ்டேட்களில், மாதம் தோறும் திறந்தவெளியில் வைத்து தான் ரேஷன் பொருட்களை வழங்குகின்றனர். குறிப்பாக, பன்னிமேடு பங்களா டிவிஷன் பகுதியில் செயல்படும் ரேஷன் கடையை, யானைகள் சேதப்படுத்தியுள்ளதால், கட்டடத்தின் நான்கு புற சுவர்களும் இடிந்த நிலையில் உள்ளது.  அதே இடத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால், பொருட்களை வாங்கி செல்லும் மக்களுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. தொழிலாளர்கள் நேற்று கூறுகையில் பன்னிமேடு எஸ்டேட்டில், யானைகள் வழித்தடத்தில் ரேஷன் கடை உள்ளது. இதனால் வரும் வழியில் உள்ள ரேஷன் கடையை யானைகள் சேதப்படுத்துகின்றன. ரேஷன் பொருட்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளனர்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்