சாலையில் கால்நடைகள் உலா வாகன ஓட்டுநர்கள் திணறல்!

78பார்த்தது
வால்பாறையில் ரோட்டில் உலா வரும் கால்நடைகளால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வால்பாறையில், சமீப காலமாக கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆடு, மாடு, தெருநாய் போன்றவை நடுரோட்டில் உலா வருவதால், வாகனங்களில் செல்ல முடியாமலும், ரோட்டில் நடந்து செல்ல முடியாமலும் மக்கள் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக நடமாடும் கால்நடைகளை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சிறுகுன்றா கூழாங்கல் ஆறு செல்லும் ரோட்டில், மாடுகள் ஆக்கிரமித்து நிற்பதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்லும் நிலை உள்ளது. சாலையில் நிம்மதியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். உலா வரும் கால்நடைகளை பறிமுதல் செய்ய வேண்டும். உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என இன்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி