வால்பாறை நகரில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக, பருவமழை பெய்கிறது. குறிப்பாக எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் கடும் பனிப்பொழிவும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறை பகுதி மக்களுக்கு சுாய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு உள்ளது.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறை மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை சார்பில், வால்பாறை நகரில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு, நகராட்சி சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும். நகரில் கொசு மருந்து அடிப்பதோடு, நகர் பகுதியில் உள்ள வீடு மற்றும் நடைபாதைகளில், பிளீச்சிங் பவுடர் துாவ வேண்டும். சாக்கடை கால்வாயினை துார்வாரி சுத்தப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று வால்பாறை பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.