தவெகவினர் இடையே வாக்குவாதம் - கைகலப்பு

85பார்த்தது
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெக தொண்டர்களிடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. தவெக மாவட்ட செயலாளர் குட்டி என்பவருடன் புகைப்படம் எடுக்க தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்ததால் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சில கட்சி நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி