லக்னோ அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. லக்னோ வாஜ்பாய் மைதானத்தில் நடைபெறும் 16-வது லீக் போட்டியில் லக்னோ - மும்பை அணிகள் பலபரீட்சை நடத்த உள்ளனர். இப்போட்டியில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் சர்மா இப்போட்டியில் இடம்பெறவில்லை என மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். ரோகித் கடந்த 3 போட்டிகளில் சோபிக்காதது குறிப்பிடத்தக்கது.