மோடி இலங்கை பயணம் எதிரொலி.. 11 தமிழக மீனவர்கள் விடுதலை

66பார்த்தது
மோடி இலங்கை பயணம் எதிரொலி.. 11 தமிழக மீனவர்கள் விடுதலை
பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தின் எதிரொலியாக இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 27ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். இது தொடர்பான வழக்கு வரும் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், அவசர வழக்காக விசாரித்த ஊர்காவல்துறை நீதிமன்றம், மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி