குஜராத் மாநிலம் தீசா-பலான்பூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர பைக் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சாலையில் அதிவேகமாக சென்ற பைக் ஒன்று எதிரே வந்த ஸ்கூட்டி மீது அதிபயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், பைக்கில் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்கூட்டியில் சென்ற நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.