வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பனையூரில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், தவெகவினர் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.