"புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை" - அண்ணாமலை

85பார்த்தது
கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. தமிழ்நாட்டின் புதிய பாஜக தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை. பாரதிய ஜனதா கட்சியில் தலைவர் பதவிக்கு யாரும் போட்டிப்போடுவதில்லை. எல்லோரும் இணைந்து தலைவரை தேர்ந்தெடுப்போம். தமிழ்நாட்டு மண்ணை விட்டு எங்கும் போகமாட்டேன். ஒரு தொண்டனாக கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே செய்வதே என் தலையாய பணி” என்றார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி