தவெக தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு, உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ‘ஒய்’, ‘இசட்’ என பாதுகாப்பு வழங்கும். அந்த வகையில், விஜய்க்கு அறிவிக்கப்பட்ட இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.