பிரதமர் மோடி ஏப்ரல் 6ஆம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில், இலங்கை வசம் உள்ள 100க்கும் மேற்பட்ட இந்திய விசைப்படகுகள், இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசுடைமையாக்கப்பட்ட 74 இந்திய மீனவர்களின் படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி இலங்கை சென்று திரும்பியதும், படகுகளை மூழ்கடிக்கும் பணி முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.