தியாகராய நகர் - Thiyagarayanagar

நடிகை கஸ்தூரிக்கு ஆ. ராசா எம். பி கண்டனம்

நடிகை கஸ்தூரிக்கு ஆ. ராசா எம். பி கண்டனம்

ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? என எம்பி ராசா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தெலுங்கர்களை மட்டுமல்லாமல் பெண்களையே கஸ்தூரி கேவலப்படுத்தி பேசியிருக்கிறார் என ஆ. ராசா எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராமணர் அல்லாதார் பதவிகளுக்கு வந்தால் லஞ்சம் வாங்குவார்கள்” எனச் சொல்லி ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை மிக மோசமாக இழிவுபடுத்தியிருக்கிறார் முன்னாள் நடிகை கஸ்தூரி. டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நடிகை கஸ்தூரி, “திறமை அடிப்படையில் பிராமணர் அல்லாதார் பதவிகளுக்கு வந்ததால் லஞ்சம் வாங்குகின்றனர்” என்று பேசி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகத்தினர் என ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனைவரையும் மிக மோசமானவர்களாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார். பிராமணர் சமூகம் உயர்வானது என நிலைநிறுத்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் 'குற்றப்பரம்பரை' வர்ணம் அடித்திருக்கிறார். தெலுங்கர்களை மட்டுமல்ல. பெண்களையே கஸ்தூரி கேவலப்படுத்தியிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


சென்னை
Nov 05, 2024, 14:11 IST/எழும்பூர்
எழும்பூர்

நவ. 7 முதல் 3 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

Nov 05, 2024, 14:11 IST
தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நவ. 6ம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவ. 7ம் தேதி, கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நன்றி ஏஎன்ஐ