திருவள்ளூர் நகரம் - Thiruvallur City

ஏல சீட்டில் ஏமாந்த மக்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நெய்வேலி கிராமத்தை சார்ந்தவர் ரமேஷ். இவர் அதே கிராமத்தில் மளிக கடையோடு ஏல சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் அக்கிரமத்தை சார்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை சீட்டு கட்டி வந்தனர். சீட்டு எடுத்தவர்களுக்கு முறையாக பணம் தராது ஏமாற்றி வந்ததாகவும் இதனால் அப்பகுதி மக்கள் தாங்கள் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு கட்டாய படுத்தியதை அடுத்து திடீரென ரமேஷ் அப்பகுதி மக்கள் கட்டிய ரூ. 3 கோடி பணத்தை ஏமாற்றி ஊரை விட்டு மாயமானார். இந்நிலையில் இதனை அறிந்த அவரிடம் சீட்டு கட்டி பாதிக்கப்பட்ட நபர்கள் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து 09. 09. 2024 அன்று பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று கூடி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். ஆனால் தொகை அதிகமாக இருப்பதால் இந்த புகாரை எடுத்துக் கொள்ள முடியாது என்றும் நீங்கள் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடம் சென்று மனு அளியுங்கள் என பெரியபாளையம் காவல் துறையினர் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. எனவே பணத்தை ஏமாற்றி ஊரை விட்டு சென்ற ரமேஷை கண்டுபிடித்து அவரிடம் இருந்து பணத்தை வாங்கித் தருமாறு மக்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా