பொதுமக்கள் மனுக்களை அளித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்

83பார்த்தது
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தனது அலுவலகத்தில் இன்று பொது மக்களிடம் மனுக்களாக பெற்று அவர்களது குறைகளை கேட்டறிந்தார். திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டி
முன்னாள் வட்டாரத் தலைவர் ராமன் கனகம்மா சத்திரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கூடுதல் கட்டிடங்களை கட்டி தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

அதேபோன்று பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஏழுமலை கோரிக்கை வைத்தார். மேலும் வேலைவாய்ப்பு தெரு விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எம்பி சசிகாந்த் செந்திலிடம் மனுவாக அளித்தனர். அவற்றைப் பெற்றுக் கொண்டஎம்பி சசிகாந்த் உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி