சீதாராம் யெச்சூரி மறைவுக்கு விஜய் இரங்கல்

60பார்த்தது
சீதாராம் யெச்சூரி மறைவுக்கு விஜய் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைந்த செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். முற்போக்கு அரசியலில் சீதாராம் யெச்சூரி ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். யெச்சூரியின் குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி