மைலாப்பூர் - Mylapore

சென்னை: அதிமுக நிர்வாகிகள் மீது தொடர் தாக்குதல்; இபிஎஸ் கண்டனம்

சென்னை: அதிமுக நிர்வாகிகள் மீது தொடர் தாக்குதல்; இபிஎஸ் கண்டனம்

திமுக ஆட்சியில் அதிமுக நிர்வாகிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குறறம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப்பொருள் நடமாட்டம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான கொலை வெறித் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், அதிமுக வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி செயலாளர் போகர் சி. ரவி மனித சங்கிலி போராட்டத்தின்போது, பேரூராட்சியின் அவலங்களை எடுத்துரைத்துள்ளார். இதன் காரணமாக நேற்று, பேரூராட்சி செயல் அலுவலரை வேலை நிமித்தமாக பார்க்க சென்ற ரவிவை, திமுக பேருராட்சி மன்றத் தலைவியின் கணவர் மற்றும்துணைத் தலைவர் மற்றும் சிலர் ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். இத்தாக்குதலில் காயமடைந்த ரவி சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை முதல்தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை. திமுக அரசில் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடைபெறுவது மிகுந்த கண்டனத்துக்குரியது. தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வீடியோஸ்


சென்னை
சென்னை: 253 புகார்களில் 178 மனுக்களுக்கு உடனடி தீர்வு
Oct 11, 2024, 01:10 IST/கொளத்தூர்
கொளத்தூர்

சென்னை: 253 புகார்களில் 178 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Oct 11, 2024, 01:10 IST
சென்னை காவல் ஆணையர் அருண் நேரடியாக பெற்ற 253 புகார்களில் 178 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளிவரை அரசு விடுமுறை தினங்கள் தவிர தினமும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொது மக்கள் புகார் அளிக்கலாம். புதன்கிழமைகள் தோறும் காவல் ஆணையர் அருண் நேரடியாக மனுக்களை பெற்றுக் கொள்கிறார். மற்ற தினங்களில் அவர் சார்பில் வேறு போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களின் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மேல் விசாரணைக்காக அனுப்பி வைக்கின்றனர். அதன்மீது நடத்தப்படும் விசாரணையை காவல் ஆணையர் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, காவல் ஆணையர் இதுவரை நேரடியாக பெற்ற 253 மனுக்களில் 178 புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு பொது மக்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 75 மனுக்கள் மீது அந்தந்த காவல் மாவட்டம் மற்றும் மத்திய குற்றப்பிரிவில் தகுந்த நடவடிக்கைக்காக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனுக்களின் மீது தீர்வு காணப்பட்ட புகார் மனுதாரர்களை அவர்களது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அவர்களது புகார் மனுவின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதனை கேட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து உறுதி செய்து கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது