அமைச்சர்கள் எல்லாருமே முதலமைச்சருக்கு துணையாகதான் இருக்கிறோம். துணை முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது அவரின் தனிப்பட்ட முடிவு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி, துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார். 'இன்று (செப்., 18) 11 மணிக்கு உங்களுக்குத் துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறதே? ' என்று செய்தியாளர் கேட்டதும் ஷாக் ரியாக்ஷன் கொடுத்த உதயநிதி, "நான் இன்னைக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் வந்துட்டேன். அறிவாலயமே போகலை. தொண்டர்கள் அவர்களது விருப்பத்தைத் தெரிவித்திருக்கின்றனர். நேற்று பழனிமாணிக்கம் அவர்கள் அந்த விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
எந்த முடிவானாலும் முதலமைச்சர் எடுப்பார். அமைச்சர்கள் எல்லாருமே முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருக்கிறோம். துணை முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட முடிவு எனப் பதிலளித்தார்.