சென்னை: அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

68பார்த்தது
அதிமுக மகளிரணிக்கு பெரிய வரலாறு உண்டு. இந்த அணி பலரை ஓடவிட்டுள்ளது. அதை திமுகவினர் மறக்கமாட்டார்கள் என்று அக்கட்சியின் மகளிரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி பேசியுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் புழக்கத்தையும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளையும் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக மகளிரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த அதிமுக மகளிரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி பேசியதாவது, அதிமுக மகளிரணிக்கு பெரிய வரலாறு உண்டு. இந்த அணி பலரை ஓடவிட்டுள்ளது. அதை திமுகவினர் மறக்கமாட்டார்கள்.

தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமி சட்டப்பேரவையில் பேசினார். பொதுக்கூட்டங்களில் பேசியதுடன் பல அறிக்கைகள் மூலமாகவும் வலியுறுத்தினார். அப்படி இருந்தும் திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அதிமுக மகளிரணி மூலம் திமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி