மைலாப்பூர் - Mylapore

சென்னை: தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதை கைவிடவும்: பாமக, அமமுக

சென்னை: தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதை கைவிடவும்: பாமக, அமமுக

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாமக, அமமுக வலியுறுத்தியுள்ளது. அன்புமணி:  தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக தனியார் பேருந்துகளுக்கு கி. மீ. க்கு ரூ. 51. 25 வீதம் வாடகையாக வழங்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மிகவும் ஆபத்தான இந்த முயற்சி தனியார் மயத்துக்கு வழிவகுக்கும். நெரிசல் காலங்களில் மக்களின் வசதிக்காக என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு தனியார் பேருந்துகளை அரசு இயக்குவதை ஏற்க முடியாது. டிடிவி தினகரன்: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்தஊர்களுக்கு செல்லும் பயணிகளின் தேவைக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கபோக்குவரத்துத்துறை முடிவுசெய்திருப்பது அப்பட்டமானதொழிலாளர் விரோதப் போக்காகும். தனியார் நிறுவனங்களின் மூலம் ஆட்சேர்ப்பு, ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமனம் வரிசையில் தற்போது தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது. இவையாவும் போக்குவரத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியே. எனவே, புதிய பேருந்துகளை வாங்கி இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடியோஸ்


சென்னை