மாநாட்டுக்கு மாவட்ட வாரியாக தொண்டர்களுக்கு அழைப்பு: தவெக

72பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநாட்டுக்கு வருமாறு மாவட்டம்தோறும் நேரடியாகச் சென்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக். 27-ம் தேதி விழுப்புரம், விக்கிரவாண்டி வி. சாலையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் கட்சி தலைமை நிர்வாகிகள் முதல் அனைத்து நிலை உறுப்பினர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மாநாட்டுக்கு தொண்டர்களை அழைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக அமைப்புரீதியான மாவட்டங்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், சென்னையில் மாவட்டத் தலைவர்கள் தாமு, தி. நகர் அப்புனு ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் ஆனந்த்பங்கேற்று, மாநாடு தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுக்க உள்ளேன். மாநாட்டில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து அனைவரும் தலைமைக்கு கருத்துகளைத் தெரிவிக்கலாம். எந்த உதவியானாலும் கேட்கலாம். செய்து கொடுக்க தலைமை தயாராக இருக்கிறது. கட்சித் தலைவர் விஜய் நேரடியாக மாநாட்டுக்கு அழைத்ததாகக் கருதி அனைவரும் குடும்பத்துடன் மாநாட்டுக்கு வருகை தர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி