

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்துக்குச் சென்ற மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். சென்னை அடுத்த கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை, அக்கரை அருகே தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை, அக்கரை அருகே மறித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்னதாக போராட்டத்துக்கு புறப்பட்ட தமிழிசை செளந்தரராஜனை கைது செய்து வீட்டுக் காவலில் காவல்துறையினர் வைத்துள்ளனர். டாஸ்மாக் அலுவலகத்துக்கு வெளியே கூடிய பாஜக தொண்டர்கள், நிர்வாகிகளையும் காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.