சங்கீத கலாநிதி விருது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்தாண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருதை எம். எஸ். சுப்புலட்சுமியின் பெயரில் பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், எம். எஸ். சுப்புலட்சுமியின் பெயரைப் பயன்படுத்தாமல் அவருக்கு விருது வழங்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது. மறைந்த கர்நாடக இசை பாடகியான எம். எஸ். சுப்புலட்சுமியின் பேரன் ஸ்ரீனிவாசன், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த சிவில் வழக்கில், மியூசிக் அகாடமியில் அடுத்த மாதம் டிசம்பரில் நடைபெறவுள்ள 98-வது ஆண்டு விழாவில் டி. எம். கிருஷ்ணாவுக்கு எனது பாட்டியின் பெயரில் சங்கீத கலாநிதி விருது வழங்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில், இந்தாண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருதை எம். எஸ். சுப்புலட்சுமியின் பெயரில் பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது. ஆனால் எம். எஸ். சுப்புலட்சுமியின் பெயரைப் பயன்படுத்தாமல் டி. எம். கிருஷ்ணாவுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விருது வழங்கிக் கொள்ள எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டு, மியூசிக் அகாடமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்