ஐடி ஊழியர்களுக்கு ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’: முதல்வர் அறிவுறுத்தல்

68பார்த்தது
அக். 15 முதல் அக். 18 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என்று முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், அக். 15 முதல் அக். 17 வரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

> அக். 15 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

> அக். 15 முதல் அக். 18 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.

> நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

> அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

> பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி