துறைமுகம் - Harbour

சென்னை: கச்சத்தீவை மீட்க தனி தீர்மானம்.. ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை: கச்சத்தீவை மீட்க தனி தீர்மானம்.. ஒருமனதாக நிறைவேற்றம்

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் விவாதத்துக்குப் பிறகு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இதனை அறிவித்தார். கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் ஆற்றிய உரையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும், இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்று இப்பேரவை வலியுறுத்துகிறது என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.  தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி, அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன் என தெரிவித்தார். முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயர் அப்பாவுவின் கோரிக்கையை அடுத்து தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயர் அப்பாவு அறிவித்தார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

வீடியோஸ்


சென்னை