அக். 28ம் தேதி முதல் அக். 30-ம் தேதி வரையிலான மூன்று நாட்களில், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சென்னையில் இருந்து 11, 176 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளியையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து சென்னையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர், இன்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தீபாவளிக்கு, பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக, 14, 086 பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் இருந்து மட்டும், 11, 176 பேருந்துகள் இயக்கப்படும். அக். 28ம் தேதியன்று, வழக்கமாக இயக்கப்படும் 2, 092 பேருந்துகளுடன் 700 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். அக். 29-ம் தேதியன்று 2, 125 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். அக். 30ம் தேதியன்று வழக்கமான பேருந்துகளுடன், 2, 075 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். எனவே, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 4, 900 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என தெரிவித்தார்.