அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அவதூறு வழக்கு: இபிஎஸ் ஆஜர்

83பார்த்தது
அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தான் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாட்சியம் அளித்தார்.

2019 முதல் 2021-ம் ஆண்டுகள் வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தலைமைச் செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறைகளிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22-ம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதனால் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடெஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து தெரிவிக்க அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நீதிபதி மகாலட்சுமி முன்பு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜராகி, ஆவணங்களை சமர்ப்பித்து சாட்சியம் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை டிச. 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றையதினம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி