காவல், தீயணைப்பு, தடய அறிவியல் துறைகள் சார்பில் ரூ. 78. 81 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று காணொலியில் திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி - நாகர்கோவில், புதுக்கோட்டை - மழையூர், சிவகங்கை – பள்ளத்தூரில் ரூ. 29. 81 கோடியில் 169 காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், என ரூ. 23 கோடியே 48 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 காவல் துறைக் கட்டிடங்கள் என ரூ. 56 கோடியே 26 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும், தீயணைப்புத் துறை சார்பில், தேனி - போடிநாயக்கனூர், சென்னை - தி. நகர் மற்றும் மணலி, மதுரை - மீனாட்சியம்மன் கோயில் மற்றும் கள்ளிக்குடி, நாமக்கல் - கொல்லிமலை, தஞ்சாவூர் - திருவையாறு ஆகிய இடங்களில் ரூ. 18. 78 கோடியில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான கட்டிடங்களையும் முதல்வர் திறந்தார்.
இதுதவிர, தடய அறிவியல் துறைக்கு தஞ்சாவூரில் ரூ. 3 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தடய அறிவியல் மரபணு ஆய்வகப் பிரிவு கட்டிடத்தையும் திறந்தார்.