சங்கீத கலாநிதி விருது - சென்னை உயர்நீதி​மன்​றம் உத்தரவு

67பார்த்தது
சங்கீத கலாநிதி விருது - சென்னை உயர்நீதி​மன்​றம் உத்தரவு
இந்தாண்​டுக்கான 'சங்கீத கலாநிதி' விருதை எம். எஸ்​. சுப்பு​லட்​சுமி​யின் பெயரில் பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்​கக்​கூடாது என தடை விதித்​துள்ள உயர் நீதி​மன்​றம், எம். எஸ்​. சுப்பு​லட்​சுமி​யின் பெயரைப் பயன்​படுத்​தாமல் அவருக்கு விருது வழங்​கலாம் எனவும் உத்தர​விட்​டுள்​ளது. 

மறைந்த கர்நாடக இசை பாடகியான எம். எஸ்​. சுப்பு​லட்​சுமி​யின் பேரன் ஸ்ரீனிவாசன், உயர் நீதி​மன்​றத்​தில் தொடர்ந்​திருந்த சிவில் வழக்​கில், மியூசிக் அகாட​மி​யில் அடுத்த மாதம் டிசம்​பரில் நடைபெறவுள்ள 98-வது ஆண்டு விழா​வில் டி. எம்​. கிருஷ்ணாவுக்கு எனது பாட்​டி​யின் பெயரில் சங்கீத கலாநிதி விருது வழங்க தடை விதிக்க வேண்​டும் என கோரி​யிருந்​தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்​சந்​திரன் முன்பாக நடந்​தது. அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி ஜி. ஜெயச்​சந்​திரன் பிறப்​பித்​துள்ள இடைக்கால உத்தர​வில், இந்தாண்​டுக்கான 'சங்கீத கலாநிதி' விருதை எம். எஸ்​. சுப்பு​லட்​சுமி​யின் பெயரில் பாடகர் டி. எம்​. கிருஷ்ணாவுக்கு வழங்​கக்​கூடாது. 

ஆனால் எம். எஸ்​. சுப்பு​லட்​சுமி​யின் பெயரைப் பயன்​படுத்​தாமல் டி. எம்​. கிருஷ்ணாவுக்கு நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​கள் ​விருது வழங்​கிக்​ கொள்ள எந்த தடை​யும் இல்லை என உத்​தர​விட்டு, மியூசிக் அ​காடமி தரப்​பில் ​தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை தள்​

தொடர்புடைய செய்தி