சென்னை: திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கும்முடிப்பூண்டி கி. வேணு இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில், அமைச்சர்கள் துரை முருகன், கே. என். நேரு, சேகர் பாபு உள்ளிட்டோரும், சட்டமன்ற, மாமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.