1000 இடங்களில் அக். 15-ல் மருத்துவ முகாம்: மா. சுப்பிரமணியன்

61பார்த்தது
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வருகிற அக். 15-ம் தேதி, தமிழகத்தில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். சென்னையில் மட்டும் 100 இடங்களிலும், மற்ற 37 வருவாய் மாவட்டங்களில் 900 இடங்களிலும் இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் வேண்டுகோள். காய்ச்சிய நீரையே பருக வேண்டும், வீடுகளை ஒட்டி மழைநீர் தேக்கத்தை சுத்தமாக தவிர்க்க வேண்டும், வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களில் தேங்கி இருக்கின்ற நீரை உலர்த்தி வைக்க வேண்டும், வீடுகளில் குடம் அல்லது தொட்டிகளில் பிடித்து வைக்கப்படும் நீரை துணி கொண்டு மூடி வைக்க வேண்டும்.

வருகிற அக். 15-ம் தேதி, தமிழகத்தில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தமிழகத்தில் கடந்த ஆண்டும் இதே அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி 1000 இடங்களில் ஒரே நாளில் தமிழகம் முழுவதும், சென்னையில் மட்டும் 100 இடங்களிலும், மற்ற 37 வருவாய் மாவட்டங்களில் 900 இடங்கள் என்கிற வகையில் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி