ரயில் தண்டவாளம் இறங்கியதால் மின்சார ரயில் சேவை பாதிப்பு

67பார்த்தது
சென்னை - திருவள்ளூர் தடத்தில், அண்ணனூர் - திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாள பாதை சற்று இறங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் பணிக்குச் செல்ல முடியாமல், பயணிகள் கடும் அவதியுற்றனர்.

சென்னை மற்றும் புறநகரில் பொது போக்குவரத்து சேவையில் மின்சார ரயில் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம் உள்பட பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் காலை, மாலை வேளைகளில் கூட்டம் நிரம்பிவழியும்.

இந்நிலையில், சென்னை - திருவள்ளூர் வழித்தடத்தில்,  அண்ணனூர் - திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாளப் பாதை இன்று காலை சற்று இறங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தும் ரயில்கள் வராததால், பலரும் மாற்று வாகனத்தில் வேலைக்குச் செல்ல தொடங்கினர். இதற்கிடையில், அண்ணனூர் - திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாளம் இறங்கிய இடத்தில் பிரச்சினை சரிசெய்யப்பட்டு, ரயில் சேவை ஒரு மணி நேரம் தாமதமாக இயங்கத் தொடங்கியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி