அண்ணா நகர் - Anna nagar

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை வாரஇறுதி நாள் மற்றும் பௌர்ணமி ஆகியவற்றை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர்.  பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர். இதனால், தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகளும், சென்னை மாநகர மற்றும் புறநகர பேருந்துகள் என அனைத்து பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் என அறிவிக்கப்பட்டு திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது.  மேலும் சிறப்பு பேருந்துகள் என அறிவிக்கப்பட்ட பேருந்துகளில் கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தென் மாவட்ட பேருந்துகளும், நகர்புற பேருந்துகளும் குறைக்கப்பட்டன. இதனால் வாரவிடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் கடுமையான இன்னலுக்கு ஆளாகினர்.  மேலும் திருவண்ணாமலைக்கு தேவையான கூடுதல் பேருந்துகளும் போதுமான அளவு இயக்கப்படவில்லை என்பதால் மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர். மேலும் கூட்டநெரிசல் காரணமாக பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும் முண்டியடித்துக்கொண்டு ஏறிச் சென்றனர்.

வீடியோஸ்


சென்னை
ஸ்ரீயின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. உண்மை இதோ
Apr 14, 2025, 11:04 IST/

ஸ்ரீயின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. உண்மை இதோ

Apr 14, 2025, 11:04 IST
நடிகர் ஸ்ரீ குறித்த சர்ச்சை விஷயங்களுக்கு அவரின் தோழி பதில் அளித்துள்ளார். அதாவது, "நடிகர் ஸ்ரீ ஓரினசேர்கையாளர் இல்லை. போதைக்கு அடிமை ஆகவில்லை. காதல் தோல்வியும் இல்லை. அவரின் நெஞ்சில் 12ம் வகுப்பு பயின்று வரும்போது காதல் வயப்பட்ட பெண் வீட்டார் அடித்ததில் காயம் உள்ளது. அதோடு காதலையும் அவர் விட்டுவிட்டார். சுத்த சைவம். நல்ல நபர் அவர். அவரின் கண்முன்னே அவருக்கு வந்த வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டது. இதனால் தனிமை வருத்தத்தில் தவித்து இன்று மனநல பாதிப்பை அவர் எதிர்கொண்டுள்ளார்" என கூறியுள்ளார்.