அண்ணா நகர் - Anna nagar

சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: மக்கள் அனைவரும் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள் புரியுமாறு, உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள். செல்வபெருந்தகை: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், வாழ்வில் வெற்றி பெற்று, நலமுடனும், வளமுடனும் வாழ்ந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். தமிழிசை சவுந்தரராஜன்: மக்களுக்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை கூறி நல்லறிவு, திறன், மகிழ்ச்சி மற்றும் அனைத்து வளங்களும் நாம் அனைவரின் வாழ்விலும் பெற்றிட இந்த நவராத்திரியில் நாம் வணங்கும் இறை சக்தி அருள் புரியட்டும். எல். முருகன்:  கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றையும் தரும் தெய்வங்களை வழிபடும் இந்த திருநாளில் - அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.

வீடியோஸ்


சென்னை
Oct 12, 2024, 04:10 IST/துறைமுகம்
துறைமுகம்

சென்னை ரயில் விபத்து.. ‘மீட்பு பணிகளில் அரசு துரிதம்’ - முதல்வர்

Oct 12, 2024, 04:10 IST
கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. இந்நிலையில், மீட்பு பணிகளில் அரசு துரிதமாக செயல்பட்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்தது, திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தகவல் கிடைக்கப்பெற்றவுடன், அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன். மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கெனத் தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது. விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார். நன்றி: ஏஎன்ஐ