அண்ணா நகர் - Anna nagar

சென்னை: குடியிருப்புவாசிகளை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை

சென்னை: குடியிருப்புவாசிகளை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையையொட்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வாரியத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்த குடியிருப்புகளில் உள்ள குடியிருப்புதாரர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்துள்ள நிவாரண முகாம்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களில் தங்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையையொட்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 209 திட்டப்பகுதிகளில் 1. 20 லட்சம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. குடியிருப்புதாரர்களின் வசதிக்காக வாரியத் தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் தொலைபேசி வசதியுடன் (044 – 29862104) இயங்க கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழைக்கு பின் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு வாரியம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது.

வீடியோஸ்


சென்னை