அண்ணா நகர் - Anna nagar

சென்னை: குரூப்-4; புதிதாக மேலும் 2,208 காலியிடங்கள் சேர்ப்பு

சென்னை: குரூப்-4; புதிதாக மேலும் 2,208 காலியிடங்கள் சேர்ப்பு

குரூப்-4 தேர்வில் புதிதாக மேலும் 2, 208 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 8, 932 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், ஃபாரஸ்டர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6, 244 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்த போட்டித்தேர்வை ஏறத்தாழ 18 லட்சம் பேர் எழுதினர். குருப்-4 தேர்வுக்கான அடிப்படை கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. குருப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, குருப்-4 தேர்வில் புதிதாக மேலும் 2, 208 காலியிடங்கள் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காலியிடங்களின் எண்ணிக்கை 6, 724-லிருந்து 8, 932 ஆக அதிகரித்துள்ளது.

வீடியோஸ்


சென்னை
Oct 09, 2024, 13:10 IST/மைலாப்பூர்
மைலாப்பூர்

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க துரித நடவடிக்கை: துணை முதல்வர்

Oct 09, 2024, 13:10 IST
மத்திய அரசின் நிதியுதவியை சார்ந்துள்ள சுமார் 32, 500 ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவின் விவரம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தை செயல்படுத்த மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் 2024-25 கல்வியாண்டுக்கு ரூ. 3, 586 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் 60 சதவீத பங்களிப்பு ரூ. 2, 152 கோடியாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் முதல் தவணைப் பெறப்படும் நிலையில், இந்தாண்டு இத்தொகை உரிய காலத்தில் விடுவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து நிதியை விடுவிக்குமாறு நேரில் வலியுறுத்தினார். ஆனாலும், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் பெறப்படவில்லை. நமது அரசு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நலனில் என்றைக்கும் அக்கறை கொண்டுள்ளது. மத்திய அரசின் நிதி பெறப்படாத நிலையிலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 32, 500 அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கான செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.