குன்னம் - Kunnam

பெரம்பலூர்: குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

பெரம்பலூர்: குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இன்று 16.11.2024 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலப்புலியூர் கிராமத்தில் சக்திவேல் (38) என்பவர் தனக்கு சொந்தமான மளிகைக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப்பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரியவந்தது. இந்நிலையில் தனிப்படையின் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அவரது குழுவினர் குற்றவாளியை கைது செய்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெரம்பலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டியன் குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்து அவரிடமிருந்து 1. ஹான்ஸ் – (21.9 கிலோ), 2. கூல்லிப் (200 கிராம்), மற்றும் 3. விமல் பான் மசாலா – (7.275 கிலோ), ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

வீடியோஸ்


பெரம்பலூர்