தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று பெரம்பலூரில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறை அமைச்சர்கள், கலெக்டர் கிரேஸ் மச்சாவ் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.