திருச்சுழி - Tiruchuli

விருதுநகர்: மரபு கவிதை எழுதுதல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கரிசல் இலக்கிய கழகத்தின் வாயிலாக நடத்தப்படும் இக்கரிசல் இலக்கிய திருவிழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்காக மரபு கவிதை எழுதுதல் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் தமிழ்நாட்டைச் சார்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். மரபு கவிதை போட்டிக்கான மரபு கவிதைகளை 30 நவம்பர் 2024-க்குள் vnrkarisaltp2024@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு Bamini Unicode என்ற எழுத்துவடிவில் அனுப்ப வேண்டும். மரபுக்கவிதை படைப்புகளில் அரசியல், சாதி, மத, இனம் குறித்த அவதூறுகள் மற்றும் தனிமனித விமர்சனங்கள் போன்றவை கருப்பொருளிலோ / மொழிநடையிலோ இருப்பதை தவிர்த்தல் வேண்டும். சிறந்த படைப்புகள் நியமிக்கப்பட்ட தேர்வுகுழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, படைப்பாளர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இப்போட்டியில் வெற்றிபெறுவர்களுக்கு முதல்பரிசு ரூ. 10,000/-, இரண்டாம் பரிசு ரூ. 7,000/- மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 5,000/- வழங்கப்படும். சிறந்த 5 கவிதைகளுக்கு ஊக்கப்பரிசு தலா ரூ. 2000/- வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


விருதுநகர்