நிறத்தைப் பொறுத்தும் நறுமணம் அளிக்கும் குணத்தைப் பொறுத்தும் ஏலக்காய் இரண்டு வகைப்படும். பச்சை ஏலக்காய், காவி ஏலக்காய் ஆகியவை தான் அவை. பச்சை ஏலக்காய் மனப்பதட்டம், குமட்டலை போக்கும். காவி ஏலக்காய் பச்சை ஏலக்காயை விட பெரியதாக இருக்கும். இதில் மாவுச்சத்து, புரதச்சத்து, ஈரப்பதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற மருத்துவக் குணங்கள் அதிகளவில் அடங்கியுள்ளது.